இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று (நவ. 30) நடைபெறுகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது. இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது.

ராஞ்சியில் நடைபெற உள்ள முதல் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில் விலகிய நிலையில் கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பும்ரா, சிராஜ் இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ராஞ்சியில் இதுவரை நடந்த 6 ஒருநாள் போட்டிகளிலும் இலக்கை எட்டிய இந்தியா, 3ல் வென்றுள்ளது. 2ல் தோல்வியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தநிலையில், இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்கி, 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version