Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»2வது டி20: இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
    விளையாட்டு

    2வது டி20: இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    outt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் கட்டாக்கில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் இல்லை.

    இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் டி ஹாக் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இதேபோல், மறுமுனையில் விளையாடிய தெ.ஆப்பிரிக்க அணி வீரர்களும் கட்டு கோப்பாக விளையாடினர்.

    சிறப்பாக விளையாடிய டி ஹாக் 46 பந்துகளில் 90 ரன்கள் (7 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில், ரன் அவுட்டானார். 10 ரன்களில் டி20 கிரிக்கெட் சதத்தை அவர் கோட்டை விட்டார்.

    Quinton de Kock's 90 from 46 deliveries lay the foundation, India vs South Africa, 2nd T20I, New Chandigarh, December 11, 2025

    சீராக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 213 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம் இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்க அணி 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின்னர் 214 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    அதிரடி ஆட்டக்காரர் அபிசேக் சர்மா 17 ரன்கள், கில் பூஜ்யம், அக்சார் படேல் 21 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்கள், ஹர்திக் பாண்டியா 20 ரன்கள், ஜிதேஸ் சர்மா 27 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் திலக் வர்மா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

    Tilak Varma celebrates his fifty, India vs South Africa, 2nd T20I, New Chandigarh, December 11, 2025

    அவருக்கு ஏற்றார்போல, மறுபக்கத்தில் விளையாடிய வீரர்கள் நிலைத்து நின்றும், அதிரடியாகவும் விளையாடவில்லை. இதையடுத்து 19.1 ஓவரில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தென்னாப்பிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

    2 அணிகள் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 14-ம் தேதி தருமசாலாவில் நடைபெறவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது டி20: இந்திய அணிக்கு 214 ரன்கள் இலக்கு
    Next Article இன்றைய ராசிபலன் @ 12 டிசம்பர் 2025
    Editor TN Talks

    Related Posts

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.