ஐபிஎல் 2026 சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது. 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் RCB வீரர்களும், ரசிகர்களும் கொண்டாட்டத்தில் மிதந்து வருகின்றனர்.

இந்நிலையில், மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு RCB வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர். அங்கு அவர்களுக்கு மேள தாளங்கள் மற்றும் தாரை தப்பட்டைகளுடன் அதிரடியான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹோட்டல் நுழைவாயிலில் மியூசிக் அதிர, RCB அணியின் ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஐபிஎல் கோப்பையைத் தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு செம மாஸாக குத்தாட்டம் போடத் தொடங்கினார்.

https://x.com/RCBTweets/status/2061225572387484028?

இதனைப் பார்த்து உற்சாகமடைந்த ரன் மெஷின் விராட் கோலி, உடனே க்ருணால் பாண்டியாவோடு இணைந்து கொண்டார். இருவரும் சேர்ந்து கோப்பையுடன் போட்ட மரண மாஸ் குத்தாட்டம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.

க்ருணால் பாண்டியா கோப்பையை தலையில் வைத்து ஆட, விராட் கோலி அவருடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version