விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான கர்நாடகா அணியில் கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பாரம்பரிய மிக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் நடப்பாண்டு சீசன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் லீக் போட்டிகள் டிசம்பர் 24 தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரையிலும், காலிறுதி போட்டிகளில் ஜனவரி 12ஆம் தேதியும், அரையிறுதி போட்டிகள் ஜனவரி 15ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது ஜனவரி 18ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரில் மிழ்நாடு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதனை பின் பற்றும் வகையில் இந்திய அணி வீரர்கள் அவர்களது சொந்த மாநில அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர்.

கர்நாடகா அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), கருண் நாயர் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன், கேஎல் ஸ்ரீஜித், அபினவ் மனோகர், ஷ்ரேயாஸ் கோபால், வி. வைஷாக், மன்வந்த் குமார், ஸ்ரீஷா ஆச்சார், அபிலாஷ் ஷெட்டி, பி.ஆர். ஷரத், ஹர்ஷில் தர்மனி, துருவ் பிரபாகர், கே.எல்.ராகுல் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version