இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியினர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அணியின் கேப்டன் சுப்னம் கில்லும் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் தொடர், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு கே.எல்.ராகுலும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்த போது உணவு இடைவேளை விடப்பட்டது.
இந்த தொடரில் இந்திய கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில், இதுவரை இத்தொடரில் 737 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், சுப்மன் கில் இதனை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் 655 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.