வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் காரணமாக எழுந்த சர்ச்சையால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2026 ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் சர்ச்சை தீவிரமானது. இதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது. இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

இந்தநிலையில், ஊடக அறிக்கைகளின்படி, புதன்கிழமை இன்று ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா என்பது குறித்த முடிவு மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியாவில் விளையாட வேண்டாம் என்ற வங்கதேசத்தின் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version