Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»“2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்
    விளையாட்டு

    “2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gmbb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா என்பது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. சனிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பின்னர் செய்தியாளர்களிடம் கம்பீர் பேசியதாவது:

    “ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவம் அணியில் இருப்பது முக்கியம் என கருதுகிறேன். தங்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். வரும் நாட்களிலும் இதை அவர் தொடருவார்கள். இது ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு முக்கியமானதாகும்.

    2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் இரண்டு ஆண்ட காலம் உள்ளது. நாம் எப்போதும் நிகழ் காலத்தில் இருப்பது சிறப்பானது. இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளை பற்ற காத்திருக்கின்றனர். ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த தொடரில் தங்களது திறனை வெளிப்படுத்தி உள்ளனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றி, பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பார்மெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக கருதுகிறேன்” என்றார்.

    கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற தருணத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அறிவித்தனர். தொடர்ந்து நடப்பு ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அடுத்தடுத்து அறிவித்தனர்.

    இப்போது இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இருவரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரில் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” – ராஜ்நாத் சிங் கருத்து
    Next Article சின்மயிக்கு அழுத்தம் கொடுப்பது யார்? விரைவில் உண்மை வெளிவரும்: நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேட்டி
    Editor TN Talks

    Related Posts

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!

    August 9, 2026

    ‘தி ஹண்ட்ரட்’ தொடரிலிருந்து விலகினார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்!. ஆசியக் கோப்பையிலும் பங்கேற்பதில் சிக்கல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.