19 வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன.
ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்ற ஆட்டத்தில், அமெரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. குரூப் “ஏ’-வில் இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, அமெரிக்கா உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 கட்டத்துக்கு வரும். அதில் அந்த 12 அணிகளும் தலா 6 அணிகளாக “குரூப் 1′, “குரூப் 2′ என பிரிக்கப்படும். அந்த அணிகள் தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் இன்றைய போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ்வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்சி, ஆயுஷ் மாத்ரே களமிறங்கியுள்ளனர்.
