நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்த்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது. முதல் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு ஆட்டம் இழக்க. 64 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 466 ரன்கள் சேர்த்தது.

531 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை எதிர்கொண்டு விளையாட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்திலேயே நான்கு விக்கெடுகளை அடுத்தடுத்து எழுந்தது. ஒரு கட்டத்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர் அந்த அணி வீரர் சாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடத் தொடங்கினர். ஹாய் ஹோப் 234 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அதன் பின்னர் வந்த கெமார் ரோச் உடன் இணைந்து ஜஸ்டின் கிரீவ்ஸ் தன்னுடைய தடுப்பாட்டத்தை போட்டார். அவருக்கு இணையாக கெமார் ரோச்சும் தடுப்பாட்டத்தில் இணைய நியூசிலாந்து அணியால் இவர்கள் இருவரது விக்கெட்டை போட்டியின் முடிவு வரை எடுக்க முடியாமல் போனது. போட்டி முடிவில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 388 பந்துகளில் 202* ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுபக்கம் கெமார் ரோச் 233 பந்துகளில் 58* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் கெமார் ரோச் இவர்கள் மூவரும் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மிக சாதுரியமாக கையாண்டு தோல்வியின் விளிம்பிலிருந்து அணியை மீட்டெடுத்து இந்தப் போட்டியை சமனில் முடித்திருக்கின்றனர்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வெலிங்டன் நகரத்தில் உள்ள ஃபேசின் ரிவர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version