Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: “இது தாமதமாகக் கிடைத்த நீதியே…” அன்புமணி ராமதாஸ்!!
    தமிழ்நாடு

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: “இது தாமதமாகக் கிடைத்த நீதியே…” அன்புமணி ராமதாஸ்!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருந்தாலும், இது தாமதமாகக் கிடைத்த நீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அவரது அறிக்கையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்.

    இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை. 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுக்க உதவிய அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

    இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருந்தாலும், இது தாமதமான நீதி. 6 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தாமதமாக அமைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் முதல் புகார் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பின் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கிய ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும். குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    இதையும் படிக்க: கூவாகத்தில் அழகிப் போட்டி கோலாகலம்… பட்டத்தை தட்டிச் சென்ற நெல்லை ரேணுகா…

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பல காரணங்களால் புகார் அளிக்க முன்வரவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பல பெண்கள் துணிச்சலாக புகார் கொடுக்க முன்வரலாம். அவ்வாறு முன்வரும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

    Anbumani Ramadoss Coimbatore womens court compensation imprisonment till death PMK leader Politicsபாமக தலைவர் Pollachi sexual assault case sexual assault அன்புமணி ராமதாஸ் இழப்பீடு கோவை மகளிர் நீதிமன்றம் சாகும் வரை சிறை பாலியல் வன்கொடுமை பொள்ளாச்சி பாலியல் வழக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..
    Next Article பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அனைவரும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கதக்கது.. அதிமுக!!
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.