குமரிக் கடல் மற்றும் இலங்கையையொட்டி பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ. 25) வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே திசையில் இது நகர்ந்து, தெற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குமரிக் கடல் மற்றும் இலங்கையையொட்டி பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒரே நேரத்தில் நிலவும் 3 சுழற்சிகளால், நாளை (நவ. 26) வங்கக்கடலில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு அமீரகம் அளித்துள்ளது. ‘சென்யார்’ என்றால் அரபு மொழியில் சிங்கம் என்று அர்த்தம்.

தற்போதைய சூழலில் இந்த புயல் சென்னை- நாகை இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே சென்னைக்கு வரும் 29ம் தேதி ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று (நவ. 25) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், நாளை (நவ. 26) தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version