சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இருந்து வருகிறது. இதே போல, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி போன்ற மாவட்டங்களுக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளது.

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் இருந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் சென்னை விமான நிலையம் பரபரப்பில் காணப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version