மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க சார்பாக வழக்கறிஞர் பால் கனகராஜ் மற்றும் வினோஜ் பி செல்வம் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை இரண்டு முறை அருவறுக்க தக்க வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். இவர்களின் நோக்கம் என்னவென்றால் கடந்த 22 ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மிக பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற்றது. இதை திசை திருப்ப வேண்டுமென என்பதை நோக்கமாக வைத்து தான் இது போன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் சாணக்கிய தண்மை மிகுந்த ஒருவரை எப்படி இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேச முடியும். இதற்கு ஆ.ராசா மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுன்டு அதனால் அவரை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை திமுக சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version