தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு கடந்த மே 10 அன்று பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, புதிய கூட்டணியினர் மற்றும் ஆதரவளித்த பிரிவினரை உள்ளடக்கி மேலும் 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதற்கான புதிய அமைச்சர்கள் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்த்து 23 அமைச்சர்கள் இன்று த வெ க அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் அதிகாரப்பூர்வப் பட்டியலின்படி, பல்வேறு மாவட்டங்களுக்கும், கூட்டணிச் சமன்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநாத் (தூத்துக்குடி),
அவிநாசி – கமலி,
குமாரப்பாளையம் – விஜயலட்சுமி,
காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார்,
கும்பகோணம் – வினோத்,
திருவாடானை – ராஜீவ்,
கடலூர் – ராஜ்குமார்
அரக்கோணம் – காந்திராஜ்
ஒட்டப்பிடாரம் – மதன் ராஜா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி,
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்(காங்கிரஸ்)
ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
ராசிபுரம் – லோகேஷ் தமிழ்ச்செல்வன்,
சேலம் தெற்கு விஜய் தமிழன் பார்த்திபன்,
ஸ்ரீரங்கம் – ரமேஷ்
மேலூர் – விஸ்வநாதன் (காங்கிரஸ்)
ஸ்ரீபெரும்புதூர் – தென்னரசு
கோவை வடக்கு – சம்பத்குமார்
அறந்தாங்கி – பர்வேஷ்
ஆர்.கே. நகர் – மரிய வில்சன்
கிணத்துக்கடவு – விக்னேஷ்
வேளச்சேரி – குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். ஏற்கனவே முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோதே செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
