ஆன்லைன் வாயிலாக பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாக பனையூர் வட்டார தகவல்கள் கிசுகிசுக்கின்றன.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்திற்க்கு சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜய்க்கும் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய் அதையடுத்து பண்ண வேண்டியிருந்த வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அங்கும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. ஓரிடத்தில் பைக்கில் சென்று கீழே விழுந்த தம்பதியை அவரே இறங்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார். சூழல் இவ்வாறு இருக்கும்போதும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கூட்ட நெரிசல் அசம்பாவிதம் ஏற்படுவதை விரும்பாத விஜய் ஆன்லைன் பிரசாரத்திற்க்கு மாற வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

‘விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து பார்க்க வேண்டும்’ என குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கட்சி தலைமை பலமுறை அறிவுறுத்தியும் அதை பொருட்படுத்தாமல் விஜய் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடுகின்றனர். இதனால் உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க நினைக்கும் விஜய், ஆன்லைன் வாயிலாக பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளாராம். தினமும் 20 நிமிடங்கள் வரை ஆன்லைனில் பேச அவர் விரும்புகிறார். இப்படி செய்வதால் ஓரிடத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் இப்படி விஜய் ஆன்லைனில் பேசுவதை தவெக பிரசாரக் கூட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அநேகமாக இந்த ஏற்பாடுகள் முழுமடையும் வரை அவரது கலப்பிரசஹகாரங்கள் தொடரலாமா எனவும் அதன் பிறகு ஆன்லைன் பிரச்சரங்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவு விஜய் கையில் தான் உள்ளது” என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version