தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்றும் (ஜூலை 26) நாளையும் (ஜூலை 27) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 – 38° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29° செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version