சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தன.

இந்நிலையில் சென்னை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பொய்தது.

குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம்,வேளச்சேரி, கிண்டி, ஆயிரம் விளக்கு, இராயப்பேட்டை, தேனப்பேட்டை, மெரினா கடற்கரை,திருவல்லிக்கேணி பகுதிகளிலும் மழை பெய்தது.

அதேபோல புறநகர் பகுதிகளான கோயம்பேடு, விருகம்பாக்கம், மதுரவாயல். , பழவந்தங்கல், மீனம்பாக்க, பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, பம்மல், ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இன்று காலையில் இருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Share.
Leave A Reply

Exit mobile version