Close Menu
    What's Hot

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்..!! போராட்ட வன்முறையில் 11 பேர் பலி..!!

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி..!! இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்..!!

    25 மாநகராட்சிகளிலும் 24*7 தடையின்றி குடிநீர் வழங்கணும்..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»2வது முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்!
    தமிழ்நாடு

    2வது முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay delhi visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 11-ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜய் முதன்முறையாக டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்தின் முக்கியத் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.

    குறிப்பாக, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே நாளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசினார்.

    இந்த டெல்லி பயணத்தின் போது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கால நேரக் குறைவு காரணமாக அந்தச் சந்திப்பு நடைபெறாமலேயே அவர் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில், மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிப் பகிர்வு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் வரும் 11-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்லவுள்ளார். இந்த இரண்டாவது பயணத்தின் போது, கடந்த முறை விடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழந்தையை சாக்குப்பையில் கட்டி சித்திரவதை! அங்கன்வாடி ஊழியர் அதிரடி கைது!
    Next Article தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்: அண்ணாமலை ராஜினாமா ஏற்பு..!! தனிக்கட்சி உறுதிதானா..??
    Editor web3
    • Website

    Related Posts

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்..!! போராட்ட வன்முறையில் 11 பேர் பலி..!!

    June 9, 2026

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி..!! இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்..!!

    June 9, 2026

    25 மாநகராட்சிகளிலும் 24*7 தடையின்றி குடிநீர் வழங்கணும்..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்..!! போராட்ட வன்முறையில் 11 பேர் பலி..!!

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி..!! இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்..!!

    25 மாநகராட்சிகளிலும் 24*7 தடையின்றி குடிநீர் வழங்கணும்..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

    உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கை 4 ஆக குறைப்பு..!! மத்திய அரசு ஆக்ஷன்..!!

    கியூபாவை குலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் 6.1-ஆக பதிவு..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.