பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி அலங்காநல்லூரில் தொடங்குகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாடு பிடி வீரர்களும், மாடுகளும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தை முதல்நாள் தமிழர்களின் கொண்டாட்ட நாள். தமிழ் இனத்தின் பண்பாட்டு பெருமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வை பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நான் ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version