Close Menu
    What's Hot

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!
    தமிழ்நாடு

    தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN Education university
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தகவல்  உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, இரண்டு ஆண்டுகள் தாமதமாக பதிலளித்த, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மாணவர் பரத்ராஜ், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்வில் கலந்து கொண்டு எழுதியுள்ளார். ஆனால், தேர்வு முடிவுகளில், குறிப்பிட்ட அந்த தேர்வில் பரத்ராஜ் பங்கேற்கவில்லை என, குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விளக்கம் கேட்டு, தகவல்  உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு  பரத்ராஜ் விண்ணப்பித்து இருந்தார். இரண்டு ஆண்டுகளாகியும், அதற்கு பதில் அளிக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் பரத்ராஜ் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி, 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்; ஆனால் இரண்டு ஆண்டுகளாக தகவல்களை வழங்காததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். மேலும், தனது சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த வழக்கு, மாநில தகவல் ஆணையர் பிரியாகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக பொது தகவல் அலுவலர் ஆஜராகி, மனுதாரர் அளித்த விண்ணப்பம், தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. ஆனால், ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில், மனுதாரர் கோரிய தகவல்கள்  வழங்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.

    இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், இரண்டு ஆண்டுகள் தாமதமாக தகவல் அளித்ததால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக, 20 நாட்களுக்குள் வழங்க  வேண்டும் என, பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

    மேலும், மாணவரின் சான்றிதழ்களை ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் எனவும்,  இழப்பீடு, சான்றிதழ்கள் வழங்கியது குறித்து, மே 22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பொது தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள்!
    Next Article திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    June 18, 2026

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    June 18, 2026

    திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியீடு!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.