கள்ள ஓட்டு தொடர்பான நயினார் நாகேந்திரனின் கருத்து செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை. தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்றார். மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் கூட எந்தாண்டு சேர்க்கப்பட்டவர்கள்? இதை முழுவதும் செய்வது தேர்தல் ஆணையம். வழிகாட்டு முறைகளை கொடுப்பதே தேர்தல் ஆணையம். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ, அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள்.

10 வருடங்கள் ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது, இந்த 10 வருடங்கள் இந்த கள்ள ஓட்டுகள் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கூட்டணி ஆட்சி இருந்தபோது கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போதும் கூட்டணியில்தானே உள்ளார்கள்? அப்போது எல்லாம் நல்ல ஓட்டா இருந்தது. இப்போது கள்ள ஓட்டா இருக்கிறதா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பழைய அரசியல் கட்சிகளாக இருந்தாலும், புதிய அரசியல் கட்சிகளாக இருந்தாலும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. திமுக-வை விமர்சித்தால் மட்டும்தான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்ற காலகட்டத்தில், திமுக-வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே யதார்த்தம்.

எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஒரே கருத்து திமுக. மக்களிடம் வலுவான இயக்கமாக நல்லரசு நடத்தும் ஒரு முதலமைச்சராக இந்தியாவிற்கு வழிகாட்டும் முதலமைச்சராக ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய விமர்சனத்தையும் காது கொடுத்துக் கேட்க வேண்டியது இல்லை. அரசுக்கு ஆலோசனை தரும் யோசனைகளாக இருந்தால் நிச்சயமாக அதை காது கொடுத்துக் கேட்டு அதற்கான பணிகளைச் செய்வதற்கான முயற்சிகள் எடுப்போம் என்றார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version