காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

இதனை எதிர்த்து செம்மல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version