சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குளிர்சாதன வசதி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்ப துரை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ‘ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்துள்ளார்’ என காமராஜரை அன்று அவதூறாக பேசிய அதே திமுகவினர் ‘#காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்’ என தற்போது திருச்சி சிவாவை பேச வைத்து இழிவுபடுத்தியுள்ளனர்! காங்கிரஸ்காரர்களே நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களா? இல்லை அடி மாடாகவே போய் விட்டீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version