நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரிதன்யாவின் தற்கொலை குறித்து பெண்கள் அமைப்புகள் மற்றும் மாதர் சங்கம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ரிதன்யாவின் தற்கொலைக்கு தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் ,முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப் பிரச்சனையில் தலையிடாமல், குரல் கொடுக்காமல், எங்கே இருந்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்து விட்டு கிடக்கிறார்களா? என சீமான் பேசினார். அந்த மனுவில் சீமானின் இது போன்ற பேச்சு பொது வாழ்வில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழகத்தில் பெண் உரிமைக்காக போராடுகிற பெண்கள் அமைப்புகளை ஆபாசமாக பேசுவதுமாகும். பொது வெளியில் பெண்கள் அமைப்புகளை அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version