கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு 25-6-2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.முக. அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1ந் தேதி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்படவுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version