Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஷாக்” அடிக்கும் முட்டை விலை… மீண்டும் உயர்வு
    தமிழ்நாடு

    “ஷாக்” அடிக்கும் முட்டை விலை… மீண்டும் உயர்வு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025Updated:December 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eggs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜூ தெரிவித்தார்.

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.

    இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர, நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

    இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 590 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன்படி நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 625 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பு மற்றும் கடுங்குளிர் காரணமாக முட்டை விலை அதிகரித்து வருவதாக கோழிப்பண்ணைாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் கே.சுந்தரராஜூ கூறியதாவது: ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் முட்டை விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வுக்கு கடும் குளிர் நிலவுவதே முக்கிய காரணமாகும். குளிர் சீஸன் நிலவுவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.

    அதேவேளையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த பண்டிகைகளில் கேக் முக்கிய இடம் பிடிக்கிறது. கேக் தயாரிப்பிற்காக முட்டை அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவும் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.

    நாடு முழுவதும் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி அதிகரிப்பும் முட்டையின் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.

    முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் பண்டிகை சீஸன் குறைந்தால் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது. கடும் குளிர் காரணமாக முட்டை உற்பத்தி 5 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது, என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்… அன்புமணி எதிர்ப்பு
    Next Article எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை!. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.