தமிழக சட்டமன்ற பொது தேர்தல்  வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள்  இன்று தமிழகம் வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

மே நான்காம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8:30 மணி அளவில் எண்ணும் பணி தொடங்க உள்ளது.

இதற்காக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வாக்கு எண்ணிக்கை பணிகளிலே ஈடுபடக்கூடிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மே நான்காம் தேதி யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர், தங்கள் சட்டமன்ற தொகுதி உடைய சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version