Close Menu
    What's Hot

    இது பெரிய ட்விஸ்ட்டா இருக்கே..!! ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ்… தந்தையை நெருக்கும் மகன்..??

    காலியாகும் அதிமுக கூடாரம்..!! கரூர், புதுக்கோட்டையே தவெகவில்..!! அதிரும் மாமல்லபுரம்..!!

    கடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. திணறும் ரஷ்யா..!! இந்தியாவிடம் உதவி தேடும் புதின் அரசு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“என் மேலேயே குறை சொன்னாலும் எழுதுங்க”!. கள ஆய்வு குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!
    தமிழ்நாடு

    “என் மேலேயே குறை சொன்னாலும் எழுதுங்க”!. கள ஆய்வு குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

    Editor web3By Editor web3May 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin order 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது X தள பதிவில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

    நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.

    இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

    நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.

    கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.

    ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!
    Next Article கூச்சமே இல்லையா உங்களுக்கு ? – எகிறும் ஜோதிமணி எம்.பி
    Editor web3
    • Website

    Related Posts

    இது பெரிய ட்விஸ்ட்டா இருக்கே..!! ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ்… தந்தையை நெருக்கும் மகன்..??

    July 2, 2026

    காலியாகும் அதிமுக கூடாரம்..!! கரூர், புதுக்கோட்டையே தவெகவில்..!! அதிரும் மாமல்லபுரம்..!!

    July 2, 2026

    கடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. திணறும் ரஷ்யா..!! இந்தியாவிடம் உதவி தேடும் புதின் அரசு..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இது பெரிய ட்விஸ்ட்டா இருக்கே..!! ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ்… தந்தையை நெருக்கும் மகன்..??

    காலியாகும் அதிமுக கூடாரம்..!! கரூர், புதுக்கோட்டையே தவெகவில்..!! அதிரும் மாமல்லபுரம்..!!

    கடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. திணறும் ரஷ்யா..!! இந்தியாவிடம் உதவி தேடும் புதின் அரசு..!!

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.