கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை  அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் 3 பேரும்  துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்திபோது சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற 3பேரையும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பிடித்தனர்.

விசாரணையில் 3பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி,
சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன்  என்பது தெரியவந்தது. பின்னர்  காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்  விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் குற்றவாளிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த வெள்ளக்கிணறு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version