வாரத்தின் தொடக்க நாளான நேற்று (நவ. 24) சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை இன்று (நவ. 25) அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 25) சவரனுக்கு ரூ.1,660 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.174-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று (நவ. 24) தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.110 சரிந்து ஒரு கிராம் ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனையானது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ம் தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற அளவுக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version