தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 4) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திருமண விசேஷங்கள் மற்றும் திருவிழா காலங்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.

அதேநேரத்தில், வெள்ளியின் விலையும் கடந்த மூன்று நாட்களாக மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000க்கும் விற்பனையாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version