கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களின் காரணமாக, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், உள்ளூர் சந்தையிலும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது; அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.290-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,90,000க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
