சொந்த ஆட்டோ இருந்தால் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த பெண்ணுக்கு சொந்த ஆட்டோ வாங்கி தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.

கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் தான் வாடகை ஆட்டோ ஓட்டி பிழைப்பதாகவும், தன்னைப்போன்ற பலரும் அதேபோன்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை கவனித்த ஆளுநர் அந்த பெண்ணின் கோரிக்கையை பரிசீலித்து தனது நிதியிலிருந்து ஒரு ஆட்டோ வழங்க உத்தரவிட்டார். இன்று அந்த பெண்ணை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆர்.என்.ரவி, ஆட்டோவை ஆளுநர் வழங்கினார். அதுமட்டுமல்லாது அந்த ஆட்டோவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அவர் சிறிது தூரம் பயணித்தார்.

ஒரு பெண் வைத்த சாதாரண கோரிக்கை என்று கடந்து செல்லாமல், தமிழில் பேசியதைகூட கவனித்து தன்னை ஒரு ஆட்டோக்கு சொந்தமாக்கி, தன் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பெண் ஆட்டோ ஓட்டுநர் அமலா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version