தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பில்லர் ராக் (Pillar Rock), குணா குகை (Guna Cave), பைன் பாரஸ்ட் (Pine Forest), மோயர் பாயிண்ட் (Moir Point), பேரிஜம் ஏரி (Berijam Lake) ஆகிய இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கமளித்துள்ளது. யானைகளின் நடமாட்டம் சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version