நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் நகராமனாது கர்நாடக கேரள மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பரபரப்பான சாலையாக உள்ளது. இங்குள்ள சிக்னலில் இருந்து பிரியும் சந்திப்பு சாலைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில் நேற்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நடந்து சென்ற நபர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்குள்ள ஆட்டோ மீது விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவர் மீதுமோதிய காரும் அருகில் இருந்த மற்றொரு கடைக்குள் நுழைந்து வ்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்தும் வண்டி ஓட்டி மற்றும் பாதிக்கப்பட்டவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
