கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென சிலர் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பண ஆசை காட்டி ‘குதிரை பேரம்’ பேசியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து 10 தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக அடுத்தடுத்து தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை, திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 10-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் சின்ன ஆண்டாண்டங்கோவில் சாலையில் உள்ள பாரி நகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று இரவு கரூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் சோதனை முடிந்து புறப்பட்ட போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்து சென்றுள்ளனர்.
குறிப்பாக குதிரை பேரம் தொடர்பாக நடைபெற்ற சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அலுவலகத்தை சீல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
