தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி ஆட்சி உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கூட்டணி ஆட்சி என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தமிழக காங்கிரஸில் வலுத்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

https://x.com/manickamtagore/status/2012752060211707950

இந்தநிலையில், அந்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் டேக் செய்து  பதிலளித்துள்ள மாணிக்கம் தாக்கூர், அல்றசில்ற  ITwing கனவு பலிக்காத கண்ணா . நான் உண்மையான காங்கிரஸ்காரன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version