Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»4 நாள்களுக்கு குளிர் வாட்டும்… வானிலை மையம் கணிப்பு
    தமிழ்நாடு

    4 நாள்களுக்கு குளிர் வாட்டும்… வானிலை மையம் கணிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    people fog
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை டிச.21 முதல் 24-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 25, 26 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை குறைந்தபட்ச  வெப்பநிலை (குளிர்) ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.  நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குளிர் அளவுகளின்படி  மலைப்பகுதியான ஊட்டியில் அதிகபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், சமவெளிப்பகுதியான தருமபுரியில் 15 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) 21 டிகிரி செல்சியஸை ஒட்டி   இருக்கக்கூடும்.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேச நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் முயற்சி முறியடிப்பு!
    Next Article நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    June 21, 2026

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.