சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த மீனவரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு வசித்து வருகிறது. உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக, உடலுப்புறுப்புகளை தானமாக செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ. அல்லது மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவரான சந்தோஷ் வடசென்னை அனல்மின் நிலையம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன் வந்தனர்.
அதன்படி சந்தோஷின் இரு சிறுநீரகங்கள், இதய வால்வு, கல்லீரல் தானமாக பெறப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் செய்த சந்தோஷின் உடலுக்கு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.