பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர்எழுதினர்.
கடந்த 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 95.03 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (மே 13) முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகல் பெற்றவுடன் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Articleவரும் 14, 15ல் கனமழை வெளுக்கும்.!