உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இளம் வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் பங்கேற்று அசத்தியுள்ளாஅர். சீனியர் ஆடவர் பிரிவில்1000 மீட்டர் ஸ்பிரிண்ட் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற ஆனந்தகுமார், 1.24 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் முலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2025ம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று அசத்திய ஆன்ந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் ஸ்கேட்டிங்கில் இந்தியாவை முதல் சாம்பியனான மாற்றியுள்ளது. ஆனந்த்குமாரின் சாதனை ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க கூடியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.