தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், 15 தொகுதிகளுக்கான 2ம் கட்ட  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி அன்புமணி அறிவித்தார்.

அதில் கீழ்வேளூர் – ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் – என்.சேகர் (மாநில துணைத் தலைவர் – முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி – அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் – முன்னாள் எம்எல்ஏ) ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.

15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்:

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி

பென்னாகரம் – செல்வம்,

பெரம்பூர் – திலகபாமா,

விருத்தாசலம் – தமிழரசி,

சேலம் மேற்கு – கார்த்தி,

திருப்போரூர் – பாலு,

போளூர் – பாஸ்கரன்,

விக்கிரவாண்டி – சிவக்குமார்,

சோளிங்கர் – சரவணன்,

சேலம் வடக்கு – சதாசிவம்,

காட்டுமன்னார்கோவில் – அன்புச்சோழன்,

ஜெயங்கொண்டம் – வைத்தி,

ரிஷிவந்தியம்- செழியன்,

மயிலாடுதுறை – சித்தமல்லி பழனிசாமி,

உத்திரமேரூர் – மகேஸ்குமார்

வடதமிழகத்தில் வலுவான வாக்குவங்கியை வைத்துள்ள பாமக, இந்த முறை தனது கோட்டைகளாகக் கருதப்படும் தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version