பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிக்காக, மூன்று பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்துள்ளார்.

பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன், கரூர் பாஸ்கர், மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வேணு பாஸ்கரன் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் இன்று தைலாபுரத்தில் உள்ள பாமக தோட்டத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, வரவிருக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கான ஆயத்த பணிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version