யிலில் டிக்கெட் இல்லாமல் ‘ஓசி’ பயணம் செய்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் சேர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் 1989-ன் படி ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் விதிக்கப்படும் அபராதத்தொகையை ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தொலை தூர ரயில்களிலும் பயணக் கட்டணத்துடன் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல, நடைமேடை டிக்கெட் எடுக்காதவர்களுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட இந்த அபராத தொகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால்…

இதேபோல, பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்தால் ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தால் ரூ.100-லிருந்து ரூ.2,000 ஆகவும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அனுமதி இல்லாத பொருட்கள் கொண்டு சென்றால் ரூ.2 ஆயிரம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளை கட்டாயப்படுத்தி பொருட்கள் வாங்க வைத்தாலோ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்க அழைத்தாலோ ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையை உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் கட்ட வேண்டும். உடனடியாக கட்டவில்லை என்றால், நீதிமன்றத்தில் இருமடங்காக அபராத தொகையை கட்ட வேண்டும்.அவ்வாறு கட்டவில்லை என்றால் சிறை தண்டனை வழங்கப்பட  வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் ரெயில்வே சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version