இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அன்றைய தினமே செய்தியாளர்கள் சந்திப்பில் சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் தற்போது சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதை வரலாற்றின் முதல் 50 வருடங்களை பேசும் ’தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ புத்தகம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது.
