2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் முக்கியப் பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, தமிழக வீரர்களின் சிறப்பான ஆட்டத்திறனைப் பாராட்டிய முதலமைச்சர், அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அப்போது வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தங்களின் கையெழுத்திட்ட ஜெர்சியை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version