Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
    தமிழ்நாடு

    பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    student died
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

    அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் மோகித் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவன் மோகித்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், காயம் அடைந்த மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் என அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாட்டோம் என கூறி காவல் துறையினருடன் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதே சமயம், மாணவரின் உறவினர்கள் சிலர் பள்ளி அருகே கூடி, ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளி கட்டடத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் அவர்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

    பள்ளிக் கட்டடத்தின் கைப்படி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸி நிகழ்வில் கலவரம்!. விளையாட்டு துறை அமைச்சர் ராஜினாமா?. மம்தா பானர்ஜிக்கு கடிதம்!
    Next Article பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி: இபிஎஸ் கடும் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.