எழுத்தாளரும் இந்திய மக்களவை அமைச்சரான சு வெங்கடேசன் அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் குறைகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுத்து வைத்துள்ளார்.

சு வெங்கடேசன் அவர்கள் முன்னெடுத்து வைத்த குறைகளும் கோரிக்கைகளும் :
ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே பட்ஜெட்டில், 2024- 25 நிதியாண்டில் புதிய வழித்தடத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 31,458. இதில் தெற்கு ரயில்வே துறைக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 301 கோடி மட்டும்தான். அதாவது மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் இது வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொடுத்து தெற்கு ரயில்வே துறையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வெறும் ஒரு சதவீதம் தருவது முறையல்ல.
மேலும் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மூத்தவர்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் திருத்தலங்களுக்கு மூத்தோர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் எனவே அதை விரைவில் மீண்டும் வழங்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பயணக்கட்ட சலுகைகளும், அபராத ரத்து செய்ய முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்யான தகவல் கிடைப்பதில்லை.
தமிழகம் மற்றும் கேரளாவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடக்கிறது. அதேபோல மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இரண்டாவது முனையம் அவசியம் கொண்டு வரவேண்டும். இந்த இரண்டு நகரங்களில் பிளாட்பாரங்கள் மிகவும் கூட்டு நெரிசலுடன் காணப்படுகின்றன. எனவே கோயம்புத்தூரில் போத்தனூரில் இரண்டாவது முனையமும், மதுரையில் உள்ள கூடல்நகரில் இரண்டாவது முனையமும் அமைய வேண்டும்.
சமீபத்தில் செம்மங்குப்பத்தில்நடந்த பள்ளி குழந்தைகள் உயிரெழுப்பு மற்றும் விபத்துக்கள் போன்றவை ஏற்பட முக்கிய காரணம் செய்யாத ரயில் கேட்டுகளால் தான். எனவே ரயில் பாதுகாப்பிற்கு இன்டர்லாக் செய்யாத ரயில் கேட்டுகளை அனைத்தையும் இன்டர் லாக் வசதி கொண்ட ரயில் கேட்களாக மாற்றி அமைக்க போதுமான நிதி வழங்க வேண்டும்.
கொல்லம் நாகூர் விரைவு ரயில் மீண்டும் கொண்டுவர வேண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு வெங்கடேசன் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தன் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.
