சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் Green power and renewable energy sector 25வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர், “நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசு அமைந்து வெறும் ஒரு மாத காலமே ஆகியுள்ளது நான் அமைச்சராக பொறுப்பேற்ற மூன்று வாரங்கள் பணி முடிவுபெற்றுள்ளது , இந்த துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்யப்பட்ட ஆய்வுகளில் கடந்த அரசு கொண்டு வந்த திட்டங்களில் பல்வேறு விரிசல்கள் உள்ளது என தெரியவந்தது , சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல் , விநியோகித்தால் ஆகிய பல்வேறு துறைகளில் நான் அமைச்சரவை பொறுப்பு பெற்றவுடன் அனைத்து இடங்களிலும் உள்ள திட்டங்களை ஆய்வு செய்துள்ளோம் , ஆய்வுக்கு பிறகு இந்திய முழுவதும் அனைத்து திட்டங்களும் சீரமைக்கபட வேண்டிய தேவை உள்ளது.

இதன் காரணமாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்கும் திட்டங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை இந்தியா முழுவதும் தற்போது அதிகளவில் உள்ளது , தமிழகத்தில் மின்சாரம் தேவைக்கு ஏற்ப அளவில்  மின்சாரம் தயாரிக்கும் நிலையை அடைந்துள்ளோம்.

மேலும் தமிழகத்தில் 15,000 மெகாவாட் கொள்ளளவு மட்டுமே உள்ளது , புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வியாபார நோக்கில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தேவையான ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்.

மின்சாரம் தயாரித்தல் மற்றும் விநியோகித்தலை சீரமைக்க வேண்டும் இந்த விநியோகம் இல்லையெனில் நம்மால் தினசரி செயலாற்ற  இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படலாம்” என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சூரிய ஒளி காற்று போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது , இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர் ,
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மேம்படுத்துவதற்கு பல்வேறு முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான கட்டமைப்புகள் இல்லை , இதனால் இதனை சீர்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தலில் முதலீட்டாளர்கள் பல்வேறு தரப்பில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான முறையான கட்டமைப்புகள் தற்போது சரியாக இல்லை. அதனை மேம்படுத்த வேண்டிய முயற்சிகளை ஏற்படுத்துகிறோம் , தயாரிக்கப்படும் மின்சாரத்தை மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது தமிழகத்தின் அந்த கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை.

குறிப்பாக ராஜஸ்தானில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அதே போலதான் இங்கும், திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு நிலையில் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது இதை போன்ற கூட்டமைப்புகள் மூலம் அனைவரும் எந்த விதமான எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றனர் என்ற தகவல்கள் தெரிய வருகிறது ,

தமிழகத்தில் பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிப்படுத்தல்மையை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் இது கூட்டத்தில் கூட 25 வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் முதல் முதலாவதாக முதலீடு செய்தது தமிழகம் தான் எனக்கு குறிப்பிட்டனர்.

ஆனால் தற்பொழுது பின்தங்கிய நிலையில் தமிழகம் உள்ளது அதனால் தற்போது வரும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அளவில் கட்டமைப்புகள் மற்றும் வெளிப்படை தன்மையை கொண்டு வர உள்ளோம் , கடந்த ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது முதலில் அவர்களுக்கு அரசியல் கலைஞர்கள் இல்லாமல் எப்படி முதலீடு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டிருந்தது.

பல ஆண்டுகளாக கட்சியினை சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவிலான இடங்களை கையகப்படுத்தி அங்கு வேறு யாரும் மின்சாரம் தயாரிக்க முடியாத அளவில் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த நிலை தற்பொழுது களையப்பட்டு தனிநபர் ஆதிக்கத்தில் உள்ள முதலீடுகளை தற்போது தடுத்து நிறுத்தி உள்ளோம், அடுத்த ஒரு வார காலத்திற்குள் புதிய திட்டங்கள் இயற்றப்படும்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளிப்படையான ஒரு நிலையினை கொண்டு வர உள்ளோம் என அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளோம் , அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் எப்படி செயல்பட உள்ளோம் என முதலீட்டாளர்களுக்கு எடுத்து கூறியுள்ளோம். வெளிப்படை தன்மையுடன் அவர்கள் முதலீடு செய்வதற்கான வழி வகையும் அமைத்து தந்துள்ளோம்.

இதன் மூலமாக அடுத்த வரும் ஆண்டுகளில் மின் தேவை பூர்த்தி செய்து கொள்ளலாம் , முதல் கட்டமாக பேட்டரிகள் மூலமாக சேமிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தையும் காற்று வழி மின்சார தயாரிப்பையும் மேம்படுத்த உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து அடுத்த படியாக படிப்படியாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு மின்சார தயாரிப்பு மட்டுமே தனியார் மயமாக்கப்படும். அதனை தொடர்ந்து அனைத்து கட்டமைப்புகள் மற்றும் விநியோகத்தையும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் எங்கு மின்வெட்டு ஏற்படுகிறது அதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறோம். தனிநபர்கள் காரணமாக ஏற்படும் மின்வெட்டுகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம், கைது செய்துள்ளோம் ,

சிசிடிவிகள் இருந்த இடத்தில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிசிடிவிகள் இல்லாத இடத்தில் பொதுமக்கள் உதவியுடன் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது , பெரம்பூரில் சில இடங்களில் வேண்டுமென மின்வெட்டுகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை பெரியதாக ஆவதற்கு தனி நபர் தூண்டுதலின் பேரில் பல்வேறு நபர்கள் காலையில் இருந்து போராடுவது போல் இருக்கின்றனர்.  அதனை துரிதமாக நமது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் , பொதுமக்களும் எங்களுக்கு இதில் ஒத்துழைப்பு தர வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்கள் இருந்தால் அவர்களை அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மின்னகத்தில் இருந்து தினந்தோறும் ஏற்படும் மின்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் , கடந்த ஆட்சி காலத்தில் மின்னகமும் விநியோகமும் தனித்து செயல்பட்டார். ஆனால் தற்பொழுது இரண்டு பிரிவுகளும் இணைந்து செயல்பட்டு தேவையான உதவிகளை உடனடியாக அளித்து வருகின்றன ,

நேற்றைய தினம் வட சென்னையில் 20 நபர்கள் கொண்ட மூன்று குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் , பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் உடனடியாக தீர்வு காணும் படியான குழுக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகிறது ,

உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தயாரிக்கும் இரண்டு மையங்கள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு மையங்களில் இருந்து செயல்படும் அனைத்து பணிகளையும் தற்பொழுது தலைமை அலுவலகத்தில் இருந்து செயல்பட மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இந்த இரண்டு மையங்களிலும் தனிநபர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அந்த இரண்டு மையங்களில் உள்ள மேலாண்மையை நீக்கிவிட்டு அங்கு தயாரிக்கும் பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறோம். அனைத்து இயக்கப் பணிகளும் தலைமை அலுவலகத்தில் இருந்து செயல்படும்படி கடந்த இரண்டு வாரங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version