2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கும், 2025ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது அருள்மொழி என்பவருக்கும், 2025ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனை செல்வனுக்கும், 2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம். இதயத்துல்லாவுக்கும், 2025ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திருவிக விருது முதுமுனைவர் இறையன்பு ஐஏஎஸ்-க்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் சு.செல்லப்பாவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஜனவரி 16ம் தேதி ரூ.5 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி சிறப்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
